Published : 03 Mar 2015 08:43 AM
Last Updated : 03 Mar 2015 08:43 AM
மகாவிஷ்ணுவை அர்த்த நாரீஸ்வரர் கோலத்தில் 2015-ம் ஆண்டு டைரியில் பிரசுரித்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் மீது பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து விவரம் அளிக்குநாறு தேவஸ் தானத்துக்கு ஆந்திர உயர் நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டது.
திருமலை-திருப்பதி தேவஸ் தானம் சார்பில் ஆண்டுதோறும் காலண்டர்கள், டைரிகள் அச்சடிக் கப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுக்கு பக்தர்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. இந்த ஆண்டின் டைரியை தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களின் பொது ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில் விஜயவாடா வைச் சேர்ந்த விஷ்ணு சகஸ்ர நாம பாராயன மண்டலி அமைப் பினர் ஆந்திர உயர் நீதிமன்றத் தில் பொது நல வழக்கு தொடுத் துள்ளனர். அதில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள 2015-ம் ஆண்டு டைரி பக்தர்களை குழப்பும் வகையிலும், இந்து புராண, இதிகாசங்களுக்கு எதிராகவும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
விஷ்ணு புராணம் உட்பட வைஷ்ணவ புராண, இதிகாசங்கள் மற்றும் உபநிஷத்துகள் போன்ற வற்றில் மகாவிஷ்ணு அர்த்த நாரீஸ்வரர் எனக் குறிப்பிட வில்லை. சிவ பெருமான் மட்டுமே சக்திக்கு தனது உடலில் பாதியை கொடுத்து அர்த்த நாரீஸ்வரர் என பெயர் பெற்றுள்ளார்.
ஆனால் திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், மகாவிஷ்ணு, லட்சுமிதேவி ஆகிய இருவரை அர்த்த நாரீஸ்வரர் கோலத்தில் டைரியில் அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது. இது பக்தர்களை குழப்பும் வகையில் உள்ளது. இந்த டைரியை தொடர்ந்து விற்பனை செய்ய தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஆந்திர உயர் நீதிமன்றம், பெருமாளுக்கு பல நாமங்கள் உண்டு. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT