Published : 19 Mar 2015 09:07 AM
Last Updated : 19 Mar 2015 09:07 AM
தொடந்து மூன்றாவது நாளாக நேற்றும் தங்கத்தின் விலை சரிந்தது. தலைநகர் டெல்லியில் 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 165 ரூபாய் சரிந்ததில் 26,000 ரூபாய்க்கு கீழே குறைந்தது. கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. சர்வ தேச அளவில் தங்கத்தின் விலை சரிந்து வருவதும் உள்ளூர் வியாபாரிகளிடம் தங்கம் வாங்கும் போக்கு குறைந்ததும் இதற்குக் காரணமாகும்.
அமெரிக்கா மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் நியூயார்க் சந்தையில் ஒரு அவுன்ஸ் (31.10 கிராம்) தங்கத்தின் விலை 1142 டாலருக்கு (ரூ. 71,706) சரிந்தது. கடந்த நவம்பர் 7-ம் தேதிக்கு பிறகு இப்போதுதான் இந்த விலையை தங்கம் தொடுகிறது. இதேபோல வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 250 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 35,400 ரூபாயாக விற்பனையானது.
சென்னையில்..
சென்னையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதைத் தொடர்ந்து தங்க நகைக் கடைகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் தங்கம் வாங்கி வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். கடந்த 3 நாட்களாக அனைத்து விற்பனையகங்களிலும் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது என்று சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ. 19,480 ஆக விற்பனையானது.
24 கேரட் தங்கம் 10 கிராம் ரூ. 25,940 என்ற விலையில் விற்பனையானது.
வெள்ளி கிலோ ரூ. 35,110-க்கு விற்பனையானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT