Published : 16 Mar 2015 06:17 PM
Last Updated : 16 Mar 2015 06:17 PM
ரயில் பயணச்சீட்டு பெற்ற பிறகு பணம் செலுத்தும் வசதி குறித்து ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த எழுத்துபூர்வ விளக்கம்:
ரயில்வே துறையின் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) இ-டிக்கெட் சேவைக்கு, பயண சீட்டு பெற்ற பிறகு பணம் செலுத்தும் புதிய திட்டத்தை 01.01.2015 அன்று முன்னோடி திட்டமாக அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் www.bookmytrain.com என்ற இணையதளம் மூலம் பயணச் சீட்டு பெற்ற பிறகு பணம் செலுத்தும் வசதி அல்லது இணைய வழி பணம் செலுத்தும் வசதியை தேர்ந்தெடுக்கலாம்.
பயணம் தொடங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் தங்களது பயண சீட்டை பதிவு செய்யலாம்.
பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், பல்வேறு தரப்பினரின் கருத்துகளின் அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT