Published : 09 Mar 2015 08:50 AM
Last Updated : 09 Mar 2015 08:50 AM

நாகாலாந்தில் கலவரம் பரவும் அபாயம்: இன்டர்நெட், எஸ்எம்எஸ் சேவைக்கு தடை- சிறைக் கைதி படுகொலை தொடர்பாக 22 பேர் கைது

நாகாலாந்தில் சிறை கைதியை படுகொலை செய் தது தொடர்பாக 22 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

படுகொலையை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடப்பதால் இன்டர்நெட், எஸ்எம்எஸ் ஆகியவற்றுக்கு மாநிலம் முழுவதும் நாளை மாலை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. திமாப்பூரில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது.

நாகாலாந்தின் திமாப்பூரில் பெண் ஒருவரை, சையது பரீத் கான் என்பவர் கடந்த மாதம் 23-ம் தேதி பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது. அவரை போலீஸார் கைது செய்து திமாப்பூர் மத்திய சிறையில் அடைத்தனர். நீதி மன்ற காவலில் இருந்த சையது பரீத் கானை, ஆயிரக் கணக்கான மக்கள் கடந்த 5-ம் தேதி சிறையை உடைத்து வெளியில் இழுத்து வந்தனர். அந்தக் கும்பல் அடித்து உதைத் ததில் அவர் பலியானார்.

பலியான சையது, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வர். அவரது உடல் நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் சையது மீது பொய் குற்றச்சாட்டு கூறி அவரை கொன்று விட்டதாக கூறி அசாம் மாநிலத்தில் கரீம்கஞ்ச் (சையது பரீத் கானின் சொந்த ஊர்) உட்பட பல பகுதிகளில் மக்கள் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல சையது படு கொலையைக் கண்டித்து நாகாலாந்திலும் போராட் டங்கள் நடந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து இன்டர் நெட், எஸ்எம்எஸ் போன்ற வற்றுக்கு நாளை மாலை 6 மணி வரை நாகாலாந்து முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமாப்பூர் நகரில் பிற்பகல் 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறும்போது, ‘‘பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப் பட்டிருப்பது மருத்துவ பரி சோதனை அறிக் கையில் தெரிய வந்துள்ளது’’ என்று தெரி வித்தார். வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் வபாங் ஜமீர் கூறும்போது ‘‘படு கொலை தொடர்பாக இது வரை 22 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். திமாப்பூரில் பதற்றம் நிலவினாலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது’’ என்றார்.

ரூ.5,000 கொடுத்தார்

பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, ‘‘என்னை பலாத்காரம் செய்த நபர் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்தார். பலாத்காரம் செய்த பின்னர் அவர் என்னிடம் ரூ.5,000 கொடுத்தார். சம்பவத்தை வெளியில் யாரிடமும் சொல் லாதே என்றார். நான் பணத் தைப் பெற்றுக் கொண்டு, போலீஸ் நிலையம் சென்று நடந்தவற்றைக் கூறினேன். போலீஸாரிடம் பணத்தை ஒப்ப டைத்தேன்’’ என்று கூறியுள் ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x