Last Updated : 05 Mar, 2015 05:54 PM

 

Published : 05 Mar 2015 05:54 PM
Last Updated : 05 Mar 2015 05:54 PM

நான் விவசாயிகளின் எதிரி அல்ல: பிரதமர் நரேந்திர மோடி

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் தான் விவசாயிகளுக்கு எதிரானவன் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் ஸ்ரீ சிங்காஜி அனல் மின் நிலையத்தின் 2 யூனிட்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நரேந்திர மோடி, “முந்தைய அரசு தாக்கல் செய்த சட்டத்தின் படி பள்ளிகளுக்கு, மருத்துவமனைகளுக்கு, வீடுகளுக்கு, நீர் மற்றும் விவசாயம் ஆகியவற்றுக்கு நிலம் ஒதுக்கும் சலுகைகள் அளிக்கப்படவில்லை. நான் கேட்கிறேன் உங்களுக்கு இவையெல்லாம் தேவையா இல்லையா?

நான் விவசாயிகளின் எதிரி அல்ல. விவசாயிகளுக்கு எதிரானவன் அல்ல நான், விவசாயிகளை நாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை. மற்ற கட்சிகளிடம் நான், அதில் மேம்பாடு செய்யப்படவேண்டியது எது என்று கேட்கிறேன், ஆனால் அவர்கள் எந்தவித ஆலோசனைகளையும் வழங்கவில்லை.

முந்தைய அரசு, மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள், வீடுகள் ஆகியவற்றுக்கு நிலச் சட்டத்தில் ஒதுக்கீடுகள் செய்யவில்லை.

முந்தைய அரசின் சட்டத்தின் படி விவசாயிகளுக்கு தண்ணீரோ, நீர்ப்பாசன வசதியோ கிடைக்காது.

நாங்கள் தற்போது ஏழைகள், விவசாயிகள், பழங்குடியின மக்கள், தலித் சகோதர, சகோதரிகள் ஆகியோர்களின் நலன்களுக்காக இந்த நிதிநிலை அறிக்கையில் முனைப்புடன் செயல்பட்டு சில திட்டங்களை ஏற்படுத்தியுள்ளோம்.

மின்சாரத்தின் உபயோகத்தை நாம் கட்டுப்படுத்திக் கொள்ள பழகவேண்டும். நம் குழந்தைகளுக்கு இது நல்லது. சுமார் 20% மக்களுக்கு மின்சாரம் இல்லை. மின்சாரத்தினால் வீடுகள் மட்டும் பிரகாசிப்பதில்லை, வாழ்க்கையே பிரகாசமாகிறது. கனவுகள் பிரகாசமாகிறது, எதிர்காலமும் பிரகாசமாகிறது.

மின்சாரம் இல்லாமல் ஒருவரை வைத்திருக்கிறோம் என்றால் கற்காலத்துக்கு நாம் அவரை இட்டுச் செல்கிறோம் என்பதே பொருள். ”

இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x