Published : 21 Mar 2015 07:13 PM
Last Updated : 21 Mar 2015 07:13 PM
கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், மேற்கு வங்க மாநிலத்தில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனால் அங்கு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் விஷ்ணுபதி எனும் கிராமத்தில் அதுல் பிரசாத் லெத் மற்றும் சிவ்ரம்பூர் கிராமத்தில் பிஜாய் ஹன்ஸ்டா ஆகிய இரண்டு கிழங்கு விவசாயிகள் தங்களின் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாததால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இருவரும் இன்று காலை பர்தமன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இவர்கள் விளைவித்த பொருட்களுக்குச் சரியான விலை கிடைக்காததால், அவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக அவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஜமால்பூர் எம்.எல்.ஏ. உஜ்வால் பிரமனிக் கூறும்போது, "வேறு ஏதோ காரணத்துக்காகக் கடனை வாங்கிவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் அதுல் தற்கொலை செய்துகொண்டான்" என்றார்.
முன்னதாக நேற்று முன்தினம் கந்தகோஷ் கிராமத்திலும், படர் மற்றும் மங்கோல்கோட் கிராமங்களிலும் மூன்று விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்போது நிகழ்ந்திருக்கும் மேலும் இரண்டு தற்கொலைகளால், கடந்த 15 நாட்களில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT