Published : 04 Mar 2015 10:30 AM
Last Updated : 04 Mar 2015 10:30 AM

ஆம் ஆத்மி கொள்கைகளை கேஜ்ரிவால் மறந்துவிட்டார்: பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மியின் அடிப்படை கொள்கைகளை கேஜ்ரிவால் மறந்துவிட்டார் என்று பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறி யிருப்பதாவது:

கட்சியின் தற்போதைய நட வடிக்கைகள் தனிநபரை சார்ந்த தாக உள்ளன. அதை தீவிர மாக எதிர்க்கிறேன். கட்சியின் செலவினங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை. அந்த விவரங் களை பொது அரங்கில் கட்சித் தலைமை வெளியிடவில்லை.மற்ற அரசியல் கட்சிகளைப் போன்று ஆத் ஆத்மி செயல்படுவதில் எனக்கு துளியும் விருப்பமில்லை.

கட்சியின் அடிப்படை கொள் கைகளை கேஜ்ரிவால் மறந்து விட்டார். அவற்றில் இருந்து அவர் வெகுதூரம் விலகியுள்ளார். என்னையும், யோகேந்திர யாதவையும் கட்சியில் இருந்து நீக்கினால் எங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. கேஜ்ரிவாலை கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் கோரவில்லை.

பாஜகவுடன் நான் நெருக்கமாகி வருவதாக குற்றம் சாட்டப்பட்டிருப்பது தவறான தகவல். அருண் ஜேட்லி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரைச் சந்தித்தேன். அதில் அரசியல் இல்லை என்றார்.

ஆம் ஆத்மியின் நிறுவன தலைவர்களில் ஒருவரும் பிரசாந்த் பூஷணின் தந்தையுமான சாந்தி பூஷண் இருதரப்புக்கும் இடையே சமரச முயற்சியில் ஈடு பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது ‘‘கட்சியின் நலன் கருதி பிரசாந்த் பூஷணும் யோகேந்திர யாதவும் கேஜ்ரிவாலை ஆதரிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x