Published : 24 Mar 2015 09:12 AM
Last Updated : 24 Mar 2015 09:12 AM

தலித் பெண் அமைச்சர் குறித்து விமர்சனம்: ரோஜா மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கு - ஆந்திர காவல் நிலையங்களில் பதிவு

தலித் பெண் அமைச்சரை தரக்குறைவாக விமர்சித்ததாக நடிகை ரோஜா மீது ஆந்திராவில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் நேற்று வழக்குகள் பதிவாயின.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வர் ரோஜா. இவர் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளும் கட்சியைச் சேர்ந்த மகளிர் மேம்பாடு, மாற்று திறனாளிகள் நலத் துறை அமைச்சர் பீதல சுஜாதாவை தரக்குறைவாக பேசியதாக வீடியோ காட்சிகள் வெளியாயின.

இதுதொடர்பாக, ரோஜா மீது நேற்று ஒரே நாளில் நெல்லூர், குண்டூர், விஜயவாடா, கர்னூல், கிழக்கு கோதாவரி போன்ற பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் தலித் அமைப் பினர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், ரோஜா மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோன்று மாற்று திறனாளி களை ரோஜா அவமதித்ததாக ஹைதராபாத்தில் உள்ள சைஃபாபாத் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில பேரவை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. அனிதா நேற்று நோட்டீஸ் வழங்கினார். இதுகுறித்து ஆலோசனை நடத்திய அக்குழு, அடுத்த மாதம் 11-ம் தேதி மீண்டும் கூடி நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானித்தது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் தனது கட்சி நிர்வாகிகள், தொண்டர் களுடன் நெக்லஸ் ரோடில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து சட்டப்பேரவை வரை ரோஜா ஊர் வலமாக சென்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆளும் கட்சியைச் சேர்ந்த போண்டா உமா, புச்சய்ய சவுத்ரி மற்றும் சிலர் அரசியல் காழ்ப் புணர்வுடன் நடந்து கொள்கின் றனர். தனி நபர் குறித்த விமர்சனங் களை செய்கின்றனர். சினிமா நடிகை என்பதால் கீழ்த்தரமாக பேசுகின்றனர். சபாநாயகரும் இதனைகண்டுகொள்ளாமல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல் படுகிறார். பேரவை நிகழ்ச்சிகள் அடங்கிய வீடியோ காட்சிகள் எப்படி வெளிவந்தது? இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெலுங்கு தேசம் கட்சி என்.டி.ராமா ராவ் தொடங்கிய கட்சி. ஆனால்முதல்வர் சந்திரபாபு நாயுடு சொந்தமாககட்சி தொடங்கி, தேர்தல் வாக்குறுதி அளித்து, தேர்தலை சந்தித்தால், அவர்வார்டு உறுப்பினராகக் கூட வெற்றி பெற மாட்டார். இவ்வாறு ரோஜா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x