Published : 11 Mar 2015 01:06 PM
Last Updated : 11 Mar 2015 01:06 PM
தேசத்தந்தை மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் ஏஜென்ட் என்றும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை ஜப்பானியர் எனவும் விமர்சனம் செய்த, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவைக் கண்டித்து மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது வலைப்பூவில், காந்தி ஒரு பிரிட்டிஷ் கைக்கூலி, பிரிட்டிஷாருடன் சேர்ந்து இந்தி யாவைப் பிளவுபடுத்தினார் என்பன போன்ற கருத்துகளை அவர் எழுதியிருந்தார். மேலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜப்பானிய கைக்கூலி எனவும் கூறியிருந்தார். கட்ஜுவின் இந்தக் கருத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது.
நேற்று மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில், எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சியினர் இணைந்து கட்ஜுவின் கருத்து எதிராக கண்டனங்களைத் தெரிவித்த னர். சமாஜ்வாதி கட்சி எம்.பி. நரேஷ் அகர்வால் முதலில் இப்பிரச்சி னையை எழுப்ப மற்றவர்கள் உடன் இணைந்து கொண்டனர்.
பின்னர் கட்ஜுவைக் கண்டித்து மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி கொண்டு வந்த தீர்மானம் அரசியல் கட்சிகள் பேத மின்றி அனைவரின் ஒருமித்த கருத்தோடும் நிறைவேறியது.
தீர்மானத்தின் போது பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவின் கருத்து முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற கருத்துகளைக் கூறும் மனோநிலை உள்ள ஒருவர் உச்ச நீதிமன்ற நீதி பதியாக நியமிக்கப்பட்டது ஆச்சரி யமாக உள்ளது. இதுபோன்ற பலவீனமான நடைமுறையை மாற்ற நாங்கள் முயற்சி செய் கிறோம்” என்றார்.
சர்ச்சைக்குப் பெயர் பெற்றவர்
கட்ஜு இதுபோன்று சர்ச்சைக் குரிய கருத்துகளைக் கூறுவது இது முதல் முறை அல்ல. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக முதல்வர் வேட்பாளராக கிரண்பேடி நிறுத்தப்பட்டார். அப்போது, “கிரண்பேடியை விட சாஷியா இல்மி மிக அழகானவர். அவரை முதல்வர் வேட்பாளராக பாஜக நிறுத்தியிருக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இதைப்போலவே அவ்வப் போது சர்ச்சைக்குரிய கருத்து களைக் கூறுவது கட்ஜுவின் வாடிக்கையாகிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT