Published : 14 Mar 2015 11:41 AM
Last Updated : 14 Mar 2015 11:41 AM

இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பு: அமைச்சர் மேனகா காந்தி

கடந்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மேனகா காந்தி, "தேசிய குற்ற கணக்கெடுப்பு ஆணையத்தின் புள்ளி விபரங்கள் அடிப்படையில், 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நாட்டில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக 2013-ல் 222 வழக்குகளும், 2012-ல் 168 வழக்குகளும், 2011-ல் 113 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

நாட்டில் அதிகரித்து வரும் குழந்தைத் திருமணங்களை தடுப்பதற்கு, குழந்தைத் திருமணங்கள் தடுப்புச் சட்டம் 2006-ன் கீழ் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x