Published : 06 Mar 2015 10:03 AM
Last Updated : 06 Mar 2015 10:03 AM
ஆம் ஆத்மியில் மற்றொரு மூத்த தலைவர் மயாங்க் காந்தி கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாள ருமான அர்விந்த் கேஜ்ரிவால் தன்னிச்சையாக செயல்படுவதாக பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து இருவரும் கட்சியின் தேசிய செயற் குழுவில் இருந்து நேற்றுமுன்தினம் நீக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர மாநில ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் மயாங்க் காந்தி கட்சித் தலைமைக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தி யுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்ததால் கட்சியில் குழப்பம் உருவானது. இதுதொடர்பாக டெல்லி யில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் நானும் கலந்து கொண்டேன்.
யோகேந்திர யாதவும் பிரசாந்த் பூஷணும் செயற்குழுவில் இருந்து தாங்களாக விலக முன்வந்தனர். மேலும் செயற்குழுவை கலைத்து விட்டு புதிய உறுப்பினர்களை வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யுமாறு யோசனை கூறினர்.
ஆனால் அவர்களின் யோசனைகள் ஏற்கப்படவில்லை. இருவருக்கும் எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு செயற்குழுவில் இருந்து நீக்கப் பட்டது மிகுந்த வருத்தமளிக்கிறது. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் நான் பங்கேற்க வில்லை.
கட்சித் தலைமைக்கு எதிராக கருத்து கூறுவதால் என் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். எதையும் சந்திக்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மயாங்க் காந்தியின் கருத்து குறித்து யோகேந்திர யாதவிடம் நிருபர்கள் கேட்டபோது, நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
அவர் கூறியபோது, கட்சியை விட்டு விலகும் எண்ணம் இல்லை. கட்சியில் ஜனநாயகம் காக்கப்பட தொடர்ந்து பணியாற்றுவேன். நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT