Published : 12 Mar 2015 09:24 AM
Last Updated : 12 Mar 2015 09:24 AM

பீடா கடைகளில் கிரிக்கெட் சூதாட்டம் 8 பேர் கைது; ரூ.14 லட்சம் பறிமுதல்

ஹைதராபாத்தில் பீடா கடைகளில் கோடிக் கணக்கில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்துள்ளது. இது தொடர் பாக நேற்று 8 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்

ஹைதராபாத் நகரில் தூல் பேட், பேகம் பஜார் போன்ற பகுதிகளில் உள்ள சாதாரண பீடா கடைகளில் கிரிக்கெட் சூதாட்டம் படு ஜோராக நடைபெறுவது தெரியவந்துள்ளது. இங்கு, சூதாட்ட வாடிக்கையாளர்களுக்கு சிகெரெட் பாக்கெட்டில் இதற்கான விவரங்கள் ரகசியமாக வழங்கப் படுகின்றன.

நேற்று முன் தினம் நடந்த இந்தியா-அயர்லாந்து லீக் போட்டியில் அதிக அளவில் சூதாட்டம் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.

அதாவது, அயர் லாந்து வெற்றி பெற்றால் செலுத் திய தொகை 5 மடங்காக வழங்கு வதாகவும், இந்தியா வெற்றி பெற்றால் இத் தொகை 2 மடங்காக வழங்கப்படுவதாகவும் சூதாட்டம் நடைபெற்றது. இது தவிர ‘பூவா, தலையா’ முதல் ஒவ்வொரு ஓவருக்கும், 4, 6 ரன்களுக்கும் பெரிய அளவில் சூதாட்டம் நடந் துள்ளது. பேட்ஸ்மேன்கள் 50, 100 அடிப்பதற்கும் சூதாட்டத்தில் பெரிய தொகைகள் கைமாறி உள்ளன. இதில் புதிய வாடிக்கை யாளர் சூதாட்டத்தில் பங்கேற்க வேண்டுமானால், பழைய வாடிக் கையாளர் அவரை அறிமுகப் படுத்த வேண்டும். அவர் மூலமாக சூதாட்ட தொகைக்காக ரூ. 10,000 டெபாஸிட் செய்ய வேண்டும் என்கிற அடிப் படை கொள்கைகளும் இந்த சூதாட்டத்தில் கையாளப் பட்டுள்ளன.

தகவல் அறிந்த ஹைதராபாத் நகர சிறப்பு போலீஸார் சுப்பிரமணியம் என்கிற முக்கிய நபர் உட்பட 8 பேரை நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ. 14 லட்சம் ரொக்க பணமும், லேப்-டாப் மற்றும் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x