Published : 05 Mar 2015 08:45 AM
Last Updated : 05 Mar 2015 08:45 AM
ஹோலி பண்டிகையையொட்டி கொண்டாடப்படவுள்ள `ஹோலிகா’வுக்காக மரங்களை வெட்டி எரிக்கக்கூடாது என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
இது குறித்து `தி இந்து’விடம் ஆக்ரா சுற்றுச்சூழல் ஆர்வலர் சுரேந்தர் சர்மா கூறியாதவது:
ஹோலிகாவுக்காக பச்சை மரங் களை வெட்டிப்போட்டு எரித்து வணங்குவதை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஹோலி பண்டிகையின் போது ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு வீணாகின்றன. இந்த வழக்கத் துக்கு மாறாக வனத்தில் உள்ள மரம், செடிகளுக்கு நீர் ஊற்றி வணங்கி ஹோலிகாவை மக்கள் கொண்டாடலாம்” என்றார்.
புராண வரலாறு
விஷ்ணு பக்தனான சிறுவன் பிரகலாதனைக் கொல்ல பல வழி களை கடைப்பிடிக்கிறார் அவனது தந்தை இரண்யன். இதன் ஒரு கட்டமாக பிரகலாதனை தீயி லிட்டுக் கொளுத்த உத்தரவிடு கிறார். அப்போது தீம்பிழம்புகளில் இருந்து தப்பி ஓடி விடாமல் இருக்க, இரண்யனின் சகோதரியும் அரக்கியுமான ஹோலிகா, பிரகலா தனை தன் மடியில் ஏந்தி அமர்ந்து கொள்கிறார். காரணம், தன்னை தீ ஒன்றும் செய்யக் கூடாது என்ற வரம் பெற்றவராம் ஹோலிகா. ஆனால், ஹோலிகா கருகி சாம்பலாகி விட அந்த தீ, பிரகலாதனை ஒன்றுமே செய்யவில்லை. இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் `ஹோலிகா தெஹன்‘ எனும் சடங்கு நடத்தப்படுகிறது.
இதற்காக, ஹோலி பண்டி கைக்கு பத்து நாட்கள் முன்பாக முக்கியமான முற்சந்தி மற்றும் நாற்சந்திகளில் மரம் செடி கொடி களை வெட்டி குவிக்கின்றனர். இதற்கு நாள்தோறும் அந்தப் பகுதியிலுள்ள பெண்கள் வந்து பூஜை செய்து வணங்குகின்றனர். கடைசியாக ஹோலிப் பண்டிகை யின் விடியலில் பூஜை செய்த பின் அதை எரித்து விடுவார்கள். அது தீ ஜுவாலைகளுடன் கொளுந்து விட்டு எரியும் போது மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரிப்பதுடன், அந்த தீயை தம் வீட்டுக்கு எடுத்துச் சென்று அடுப்பை மூட்டுவார்கள்.
காய்ந்த மற்றும் வீணாகப் போகும் மரம், செடி கொடிகளை வெட்டுவதற்குப் பதில், பச்சை மரங்களை மக்கள் வெட்டிவிடு கின்றனர். இதைத் தவிர்க்க வேண் டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உத்தரப்பிரதேச மக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
ஹோலிகா ஆக்ராவில் மட்டும் சுமார் ஆயிரம் இடங்களில் கொண்டாடப்படுகிறது. இதில் இருந்து கிளம்பும் புகை அருகி லுள்ள தாஜ்மகாலுக்கும் சேதம் விளைவிக்கும் ஆபத்தும் நிலவு கிறது. எனவே, மாநிலம் முழுவதும், ஹோலிகாவுக்கு மரங்கள் வெட்டு வதை தவிர்க்க வேண்டும் என உ.பி மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT