Published : 10 Mar 2015 09:34 AM
Last Updated : 10 Mar 2015 09:34 AM
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இப்பருவத்திலேயே அதிக அளவு பனிப்பொழிவு நேற்று பதிவானது. தொடர்ந்து 2-வது நாளாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை நேற்றும் மூடப்பட்டது.
ஸ்ரீநகரில் நேற்றுமுன்தினம் முதல் 18 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இது 53.8 மி.மீ மழையளவுக்குச் சமமானதாகும்.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் ஒரு அடி உயரத்துக்கு பனிபொழிந்துள்ளது. தெற்கு காஷ்மீரில் கோகர்நாக் பகுதியில் 1.6 அடி உயரத்துக்கு பனிபொழிவு பதிவானது.
அமர்நாத் யாத்திரையின்போது, முகாமாகச் செயல்படும் பஹல்காமில் 8 அங்குலம் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது” என்றார். பனிப்பொழிவு காரணமாக, குளிர் காற்று வீசுகிறது. ஸ்ரீநகரில் இரவில் தட்பவெப்ப நிலை மைனஸ் 0.3 டிகிரியாக நிலவுகிறது. காஷ்மீரிலேயே மிகவும் குளிரான பகுதியாக குல்மார்க் உள்ளது. இங்கு, மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. லடாக் பகுதியிலுள்ள கார்கிலில் மைனஸ் 6.4 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பம் பதிவாகியுள்ளது.
நெடுஞ்சாலை மூடல்
கடும் பனிப்பொழிவு காரணமாக, 300 கி.மீ. நீளமுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக
சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து 2-வது நாளாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலச் சரிவு பாதிப்புகள் வெகுவிரைவில் சரி செய்யப்பட்டு, போக்குவரத் துக்கு திறந்து விடப்படும்” என்றார்.
பனிப்பொழிவு காரணமாக மின் விநியோகம், தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது. மின்கம்பங்கள், மரங்கள் ஏராளமான இடங்களில் பெயர்ந்து விழுந்துள்ளன. ஸ்ரீநகருக்குள் உள்ள சாலைகளில் மாநகராட்சி நிர்வாகம் பனியை அகற்றியுள்ளது. இதனால், அங்கு போக்குவரத்துக்கு பாதிப்பில்லை. மாவட்டங்களை இணைக்கும் பாதைகளும் போக்கு வரத்துக்கு உகந்த வகையில் சரி செய்யப்பட்டுள்ளன. விரை விலேயே மின்விநியோகம் சரிசெய் யப்படும் என அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT