Published : 31 Mar 2015 09:15 AM
Last Updated : 31 Mar 2015 09:15 AM
தெலங்கானா துணை முதல்வர், உள்துறை அமைச்சர் மற்றும் அரசுஅதிகாரிகள் சிலர் நேற்று லிப்டில் சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத் ஏல்.பி. நகர் பகுதி யில் ‘அம்மா’ எனும் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று தெலங்கானா துணை முதல்வர் முகமது அலி மற்றும் உள்துறை அமைச்சர் நாயனி நரசிம்மா ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்க ளாக கலந்து கொண்டனர். அதிகாரி கள் சிலரும் கலந்து கொண்டனர்.
விழா முடிந்ததும் இவர்கள் லிப்ட் மூலம் கீழ் தளத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீ ரென லிப்ட் பழுதடைந்து நின்றது. அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக லிப்ட்டை சரிசெய்ய ஆட்களை வரவழைத்தனர். பின்னர் அரை மணி நேரத்தில்லிப்ட் சரி செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT