Last Updated : 14 Mar, 2015 09:21 AM

 

Published : 14 Mar 2015 09:21 AM
Last Updated : 14 Mar 2015 09:21 AM

பட்ஜெட் விவாதத்தை ஒத்திவைக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு

நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளிநாடு சென்றுள்ளதால் அவர் வரும் வரை பட்ஜெட் மீதான விவாதத்தை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்கள வையில் நேற்று அமளியில் ஈடுபட்டன. இதைத்தொடர்ந்து விவாதம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று மதியம் மக்களவையில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரலின்படி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவிருந்தது. நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா பேச எழுந்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியினர் எம்.பி., மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூடி, பட்ஜெட் மீதான விவாதம் மிக முக்கியமானது என்பதால் நிதியமைச்சர் அவையில் இல்லாதபோது விவாதிக்கப்படக் கூடாது என வலியுறுத்தினர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “அரசு விவாதத்தை தொடங்க முனைகிறது எனவே எதிர்ப்புத் தெரிவியுங்கள்’ என தன் கட்சி எம்.பி.க்களிடம் வலி யுறுத்தினார். இதையடுத்து அவை யில் பெரும் அமளி ஏற்பட்டது.

இதனால் அவை நடவடிக்கை ககள் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப் பட்டன. அவை மீண்டும் கூடிய தும், இதுதொடர்பான வாத பிரதிவாதங்கள் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றன.

அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, “பிரிட்டன் அரசின் அழைப்பை ஏற்று, மகாத்மா காந்தி சிலையைத் திறந்து வைக்க அருண் ஜேட்லி லண்டன் சென்றுள்ளார் அவர் திரும்பி வரும்வரை பட்ஜெட் மீதான விவாத்தின்மீது காங் கிரஸ் உறுப்பினர்கள் பேச விரும்பாவிட்டால் இன்று மற்ற கட்சியினர் பேசலாம்” என்றார்.

மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், “நிதித்துறை இணையமைச்சர் அவையில் இருப்பதால், நிதியமைச்சர் அவையில் இல்லாதது பெரும் பிரச்சினை இல்லை. எனவே, விவாதம் நடைபெறலாம்” என்றார்.

ஆனால், திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் இதனை ஏற்க மறுத்து காங்கிரஸுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர்.

“எந்தவொரு அமைச்சரும் நிதியமைச்சர்தான். தான் இல்லாத போது, விவாதத்தில் இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என எழுத்து மூலமாக ஜேட்லி கேட்டுக் கொண்டுள்ளார்” என சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

ஆனால், எதிர்க்கட்சியினர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது, அமைச்சர் வெங்கய்ய நாயுடு, “உறுப்பினர்கள் பேச விரும்பாவிட்டால் அழையை 2.30 மணி வரை ஒத்தி வைத்து, வேறு அவை நடவடிக்கையைத் தொடரலாம்” என மக்களவைத் தலைவரைக் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, பட்ஜெட் மீதான விவாதம் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்புதான் மாநிலங்களவையில் கறுப்புப் பண விவகாரத்தில் பாஜக, எதிர்க்கட்சிகளின் கடும் அமளியைச் சந்திக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x