Published : 22 Mar 2015 10:51 AM
Last Updated : 22 Mar 2015 10:51 AM
பன்றிக்காய்ச்சலுக்கு நேற்று மேலும் 21 பேர் பலியாயினர். இவர்களைச் சேர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,895 ஆக உயர்ந் துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளி யிட்ட, மார்ச் 20-ம் தேதி நிலவரப்படி நாட்டில் பன்றிக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,974. குஜராத்தில் 407 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தானில் 398 பேரும் மகா ராஷ்டிரத்தில் 342 பேரும் தெலங் கானாவில் 75 பேர், கர்நாடகாவில் 77 பேர், உத்தராகண்டில் 11பேர், பஞ்சாபில் 53 பேர் உயிரிழந் துள்ளனர். டெல்லியில் 12 பேரும், கேரளத்தில் 12பேரும், தமிழகத்தில்14 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 22 பேரும் பலியாகி உள்ளனர்.
அமைச்சகம் நடத்திய ஆய்வின்படி பன்றிக்காய்ச்சலில் உயிரிழந்த 723 பேரில் 34 சதவீதத் தின் 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT