Published : 31 Mar 2015 08:35 AM
Last Updated : 31 Mar 2015 08:35 AM
காணிப்பாக்கம் விநாயகர் கோயில் உண்டியல் பணம் எண்ணிக்கையின் போது, ரூ. 48 ஆயிரம் திருடிய தேவஸ்தான ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி போன்ற பல மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் மூலம் மாதம் சுமார் ஒரு கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாகக் கிடைக்கிறது.
இந்நிலையில், நேற்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி பூர்ணசந்திர ராவ் முன்னிலையில் 9 உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், நகைகளை எண்ணும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் பணியாற்றும் பாஸ்கர் எனும் ஊழியர், ரூ. 48, 000 திருடி தனது வேட்டியில் வைத்து கொண்டார்.
இதனைக் கண்காணிப்பு கேமரா மூலம் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து நிர்வாக அதிகாரி பூர்ணசந்திர ராவிடம் தெரிவித்தனர்.
உடனடியாக காணிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரி விக்கப்பட்டது. காவல்துறையினர் பாஸ்கரைக் கைது செய்து அவரிடமிருந்த ரூ.48 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT