Last Updated : 09 Mar, 2015 11:01 AM

 

Published : 09 Mar 2015 11:01 AM
Last Updated : 09 Mar 2015 11:01 AM

மத்திய அரசை கண்டித்து ஐஜத உண்ணாவிரதம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நிலம் கையகப்படுத்துதல் மசோதா மற்றும் இதர கொள்கைகளை கண்டித்து வரும் 14-ம் தேதி பிஹார் முழுவதும் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது. இதுகுறித்து கட்சியின் மாநிலத் தலைவர் வசிஷ்ட நாராயண் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:

தலைநகர் பாட்னாவில் உள்ள கட்சி அலுவலகத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மூத்த தலைவர்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள். அன்றைய தினம் மாவட்ட அளவிலும் வட்டார அளவிலும் கட்சி நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருப்பார்கள். நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் உள்ள குறைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை ஐக்கிய ஜனதா தளம் நடத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x