Last Updated : 16 Mar, 2015 08:54 PM

 

Published : 16 Mar 2015 08:54 PM
Last Updated : 16 Mar 2015 08:54 PM

ஃபேஸ்புக் போஸ்ட் நீக்கக் கோரும் பட்டியலில் இந்திய அரசு மீண்டும் முதலிடம்

இந்திய அரசு கடந்த வருடம் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் அடங்கிய போஸ்ட்களை நீக்கக்கோரி மொத்தம் 4,765 கோரிக்கைகளை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பியிருந்தது.

அதே போல் இம்முறையும், ஜூலை முதல் டிசம்பர் 2014 வரையிலான கால இடைவெளியில், மத எதிர்ப்புக் கருத்துக்கள், அருவருக்கத்தக்க பேச்சுகள் உள்ளிட்ட 5,832 கருத்துக்களை, இந்திய அரசின் கட்டளையின் பேரில் ஃபேஸ்புக் நீக்கியுள்ளது. மிகப் பெரிய சமூக ஊடகமான ஃபேஸ்புக் தளத்தில் இந்திய அரசே சர்ச்சையான கருத்துகளை நீக்கக் கோரி, அதிகபட்ச கோரிக்கைகளைக் கொடுத்துள்ளது.

கலிஃபோர்னியாவைச் சார்ந்த ஃபேஸ்புக் நிறுவனம், உலகளாவிய அளவில், இந்தியாவில் மட்டும் 2014 ஜூலை முதல் டிசம்பர் வரை, 5,832 கருத்துகளைத் தடை செய்துள்ளதாகத் தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இந்தப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடத்தில் இருக்கிறது. கடந்த வருடம் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 4,765 கோரிக்கைகளை எழுப்பியிருந்தது.

இது பற்றி ஃபேஸ்புக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் உள்ள சட்ட அமலாக்க முகமம் மற்றும் கணினி சார் பிரச்சனைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் குழுவின் வேண்டுகோளின் படி, அமைதியின்மை மற்றும் சீர்குலைவை ஏற்படுத்தும் மத எதிர்ப்புக் கருத்துக்கள், அறுவருக்கத்தக்க பேச்சுகள் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தடை செய்திருக்கிறோம்" என்று அறிவித்திருக்கிறது.

அமெரிக்க வெளிநாட்டு புலனாய்வுக் கண்காணிப்பு சட்டத்தின் கீழ், தேசிய பாதுகாப்பு கடிதங்கள் மூலம் தேசிய பாதுகாப்பு கோரிக்கைகளை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தடை செய்த விவரங்களும் ஃபேஸ்புக்கின் அறிக்கையில் இருக்கின்றன.

இந்தியாவைத் தொடர்ந்து துருக்கி 3,624 கோரிக்கைகளுடன் இரண்டாம் இடத்திலும், 60 கோரிக்கைகளுடன் ஜெர்மனி, 55 கோரிக்கைகளுடன் ரஷியா, 54 கோரிக்கைகளுடன் பாகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

இந்தியா, ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கக் கோரி விடுத்த 5,473 கோரிக்கைகளில் பெரும்பான்மையானவை குற்றவியல் வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில், உலகளாவிய அளவில் தடை செய்யப்பட்ட கருத்துகள் குறித்த விவரங்கள் கீழ்க்கண்ட இணைப்பில்: https://govtrequests.facebook.com/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x