Published : 27 Mar 2015 02:40 PM
Last Updated : 27 Mar 2015 02:40 PM
விவசாயிகளுக்கு எதிராகவும், தொழிலதிபர்களுக்கு ஆதரவாக வும் குறுகிய மனப்பான்மையுடன் மோடி அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் மசோதா வைக் கைவிட்டு, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதி யுள்ளார்.
விவசாயிகளுக்கு எதிரான நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஒருதலைப் பட்சமாக நிறைவேற்றிய பிறகு, அதன்பின்னான விவாதம் என்பது கட்சிகளின் ஒருமித்த கருத்தைக் கட்டமைப்பதை ஏளனம் செய்யும் செயல். இந்தச் சட்டமே தேச நலனுக்கு விரோதமானது.
குறுகிய மனப்பான்மை அரசியலிலிருந்து மத்திய அரசு வெளியே வர வேண்டும். விவசாயி கள் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளைப் பாதிக்கும் எந்தவொரு சட்டத்தையும் காங்கிரஸ் ஆதரிக்காது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மீண்டும் மோடி அரசு கொண்டு வரவேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக் காகவும், விவசாயத் தொழிலாளர் களுக்காக குரல் கொடுப்பவர் களை, தொழிலதிபர்களுக்குச் சாதகமான முடிவெடுக்கும் குறுகிய மனப்பான்மை கொண்ட மோடி அரசு தேச நலனுக்கு எதிரானவர்களாகச் சித்தரிப்பது வருந்தத்தக்க ஒன்று.
விவசாயிகளின் பாதிப்பையும் இழப்பையும் புரிந்துகொள்வதும், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதுகாப்பின்றி நிலத்தைக் கைய கப்படுத்துவது ஆகியவைதான் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டத்துக்கும், மோடி அரசு கொண்டு வந்த சட்டத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு.விவசாயிகளுக்கு ஆதரவாக இருப் பது என்பது, வளர்ச்சிக்கு எதிராக இருப்பது என்று பொருளல்ல.
இவ்வாறு, அக்கடிதத்தில் சோனியா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சோனியா உள் ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே ஆகியோருக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நிலம் கையகப்படுத்தும் மசோதா விவசாயிகளின் நலனைக் கருத் தில் கொள்வது எனக் குறிப்பிட்டு, அதுதொடர்பாக வெளிப்படை யான விவாதத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
மக்களவையில் நிலம் கையகப் படுத்தும் மசோதா நிறைவேறி யுள்ளது. மாநிலங்களவை ஒப்புத லுக்காகக் காத்திருக்கிறது. இந் நிலையில்தான் அம்மசோதா குறித்து அனைத்துக் கோணங் களிலும் விவாதத்துக்குத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுதிய கடிதத்துக்கு சோனியா மேற்கண்டவாறு பதிலளித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT