Published : 07 Mar 2015 10:22 AM
Last Updated : 07 Mar 2015 10:22 AM
பிஹார் முன்னாள் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவருமான ராம் சுந்தர் தாஸ் (95) நேற்று காலமானார்.
உடநலக்குறைவு காரணமாக, பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார்.
அவருக்கு 2 மகன்களும் 1 மகளும் உள்ளனர். அவரது மனைவி முன்னரே காலமாகிவிட்டார்.
ராம் சுந்தர் தாஸ் மறைவு பற்றி அறிந்ததும், பாட்னாவின் கன்கர்பாக் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு முதல்வர் நிதிஷ்குமார் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் நிதிஷ்குமார் அறிவித்தார்.
பிஹாரில் 1979-ம் ஆண்டு பதவியேற்ற ஜனதா கட்சி ஆட்சியில் ராம் சுந்தர் தாஸ் முதல்வராக பொறுப்பு வகித்தார்.
2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஹாஜிபூர் (தனி) தொகுதியில் இவர், ராம்விலாஸ் பாஸ்வானை தோற்கடித்தார். ஆனால் கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் பாஸ்வானிடம் தோல்வியுற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT