Published : 25 Mar 2015 01:05 PM
Last Updated : 25 Mar 2015 01:05 PM
கோவா கடற்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளனது. இதில் சென்ற 2 வீரர்கள் மாயமாகினர். மேலும் ஒருவர் மீனவர் உதவியால் மீட்கப்பட்டார்.
கோவா மாநில கடற்பகுதியில் கடற் படைக்கு சொந்தமான விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்நிலையில் விமானம் விபத்திற்குள்ளானது. கடலில் விழ்ந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விமானத்தில் பயணம் செய்த இருவர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடற்ப்படை செய்தித் தொடர்பாளர் டி.கே.ஷர்மா கூறும்போது, "செவ்வாய்க்கிழமை இரவு 10.02 க்கு விமானத்துடன் தொடர்பு இல்லாமல் போனது. கோவா கடற்கரையிலிருந்து தென் மேற்கே 25 நாட்டிகல் மைல் தூரத்தில் விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிகிறது.
விமானத்தில் 2 பைலட்கள் மற்றும் ஒரு கண்காணிப்பாளர் இருந்தனர்.
இதில் பைலட்களின் நிலைக் குறித்து தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
கண்காணிப்பாளர் மட்டும் மீனவரால் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டார். அவரது பெயர் நிகில் ஜோஷி. காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்" என்றார்
சம்பவப் பகுதிக்கு கடற்படை தளபதி அட்மைரல் ஆர்.கே. தோவான் விரைந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT