Last Updated : 03 Mar, 2015 12:37 PM

 

Published : 03 Mar 2015 12:37 PM
Last Updated : 03 Mar 2015 12:37 PM

காஷ்மீர் முதல்வர் சர்ச்சைக் கருத்து: மக்களவை இருமுறை ஒத்திவைப்பு

காஷ்மீர் முதல்வர் சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மக்களவை இன்று இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெற்றதற்கு பாகிஸ்தான், பிரிவினைவாத அமைப்பு (ஹுரியத்), தீவிரவாதிகள் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பே காரணம் என அம்மாநில புதிய முதல்வர் முப்தி முகமது சையது கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்ற இரு அவையிலும் நேற்று கடும் அமளி நிலவியது.

சர்ச்சைக்குரிய இந்தக் கருத்தில் தொடர்பில்லை என அரசின் சார்பில் மக்களவையில் விளக்க மளித்தபோதும், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், இன்று மக்களவை கூடியவுடன் இவ்விவகாரத்தில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை 11.30 வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்தது. இதன் காரணமாக 11.45 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x