Published : 15 Mar 2015 11:01 AM
Last Updated : 15 Mar 2015 11:01 AM
குடிபோதையில் கார் ஓட்டியதாக தெலுங்கு திரைப்பட இயக்குநரும், நடன இயக்குநருமான ‘அம்மா ராஜசேகர்’ மீது ஹைதராபாத் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
தெலுங்கில் கதர்நாக், டக்கரி, ரணம், சீனுகாடு, மொனார்க், முத்ரா மற்றும் மலையாளத்தில் ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை அம்மா ராஜசேகர் இயக்கியுள்ளார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி களிலும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் இவர் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் ஹைதராபாத் மாதாபூரில் இருந்து பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு குடும்பத்தினருடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது ஜூப்ளி ஹில்ஸ் தணிக்கை சாவடி அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு, ஓட்டுநர்கள் மது குடித்துள்ளார்களா என கருவி மூலம் பரிசோதித்தனர். இதில் அம்மா ராஜசேகரையும் சோதித்தபோது, அவர் மது அருந்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், காரை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT