Published : 04 Mar 2015 09:06 AM
Last Updated : 04 Mar 2015 09:06 AM
குடியரசுத்தலைவர் உரை மீதான விவாதத்தின்போது ஊழல், கருப்புப் பணம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேறி யதால் அரசுக்கு சங்கடம் ஏற்பட்டது.
இந்த திருத்தத்தை மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சீதாராம் யெச்சூரி, ராஜீவ் ஆகியோர் கொண்டு வந்தனர். அதை கைவிடுமாறு அமைச்சர் வெங்கய்ய நாயுடு விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதை யடுத்து நடந்த வாக்கெடுப்பில் இந்த திருத்தம் நிறைவேறியது.
கருப்புப் பணத்தை மீட்கவும் உயர் நிலையில் நடக்கும் ஊழலை தடுக்கவும் அரசு தவறிவிட்டது என்பது குடியரசுத் தலைவர் உரையில் இடம் பெறவில்லை என இந்த திருத்தத்தில் இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தம் இவ்வாறு மாநிலங் களவையில் நிறைவேறுவது அவை வரலாற்றில் 4-வது முறையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT