Published : 15 Mar 2015 10:07 AM
Last Updated : 15 Mar 2015 10:07 AM
இலங்கையின் தலைமன்னார், யாழ்ப் பாணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் தமிழர் பகுதிக்குச் செல்வது இலங்கை வரலாற்றில் இதுவே முதல்முறை.
அங்கு தலைமன்னார்-மடு ரயில் சேவையை அப்போது அவர் தொடங்கிவைத்தார், யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு அடிக்கல் நாட்டினார், இந்தியா சார்பில் கட்டப்பட்டுள்ள 27 ஆயிரம் வீடுகளை தமிழர்களிடம் வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்றுமுன்தினம் கொழும்பு சென்றார். முதல்நாளில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அந்த நாட்டு நாடாளு மன்றத்தில் பேசியபோது, 13-வது சட்டத் திருத்தத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும், தமிழர்களுக்கு சமஉரிமை அளிக்கப்பட வேண்டும், இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினையை மனிதாபி மானத்துடன் அணுக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மோடி பிரார்த்தனை
இரண்டாம் நாளான நேற்று அனுராத புரத்தில் உள்ள மகாபோதியில் மோடி பிரார்த்தனை செய்தார். அவருடன் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் சென்றார். அங்கிருந்து தலைமன்னாருக்கு சென்ற மோடி, தலைமன்னார்- மடு ரயில் சேவையை தொடங்கிவைத்தார். 63 கி.மீட்டர் தொலைவு கொண்ட இந்த ரயில்வே பாதையை இந்திய ரயில்வே அமைத்துக் கொடுத்துள்ளது.
பின்னர் தமிழர்கள் பெரும்பான்மை யாக வசிக்கும் வடக்கு மாகாண தலைநகர் யாழ்ப்பாணத்துக்கு மோடி சென்றார். அங்கு யாழ்ப்பாண கலாச்சார நிலையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசிய தாவது: இந்தியாவும் இலங்கை யும் வரலாற்று ரீதியாக கலாச்சார ரீதியாக ஒன்றுபட்டுள்ளன. பல்வேறு இன்னல்களுக்கு நடுவிலும் யாழ்ப் பாணம் மக்கள் தங்கள் கலாச்சா ரத்தை கட்டிக் காப்பாற்றுகின்றனர்.
யாழ்ப்பாணம் நூலகத்தில் எரிந்து போன புத்தகங்களுக்குப் பதிலாக இந்தியா சார்பில் வரலாற்று சிறப்புமிக்க புத்தகங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் அளித்த மதிய விருந்தில் மோடி பங்கேற்றார். பிற்பகலில் யாழ்ப்பாணம் இளவாழை பகுதியில் இந்திய அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள 27 ஆயிரம் வீடுகளை தமிழ் குடும்பங்களுக்கு அவர் வழங்கினார். அப்போது தமிழர் பாரம்பரியபடி பயனா ளிகளின் குடும்பங்களோடு இணைந்து மோடியும் பொங்க லிட்டார்.யாழ்ப்பாணம் நிகழ்ச்சிகளின்போது வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் உடன் சென்றார்.
டெல்லி திரும்பினார்
யாழ்ப்பாணத்தில் உள்ள நகுலேஸ்வரம் கோயிலில் மோடி வழிபட்டார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், கடவுளின் ஆசியை உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
மாலையில்் கொழும்பு் திரும்பிய அவர் அங்கு தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்தித்தார். பின்னர் நேற்றிரவு கொழும்புவில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT