Published : 04 Mar 2015 08:30 PM
Last Updated : 04 Mar 2015 08:30 PM
அரசியல் விவகாரக் குழுவிஒ இருந்து யோகேந்திர யாதவ் நீக்க அக்கட்சியின் தேசிய செயற்குழு இன்று முடிவெடுத்துள்ளது.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியை கேஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த ராஜினாமா குறித்து அவர் நேற்று முடிவு செய்யவில்லை எனவும் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி இதுகுறித்து கடிதம் எழுதியிருந்தார் எனவும் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “டெல்லி முதல்வராக இருப்பதால் கட்சிப் பணிகளை கவனிக்க முடியாது. எனவே தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என கட்சியின் தேசிய செயற்குழுவுக்கு கேஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அவரது ராஜினாமா முடிவுக்கு கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இன்றைய தேசிய செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்படும்” என்றார்.
இந்நிலையில் தேசிய செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு கேஜ்ரிவால் ராஜினாமா குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT