Published : 19 Mar 2015 11:22 AM
Last Updated : 19 Mar 2015 11:22 AM
ஆந்திர மாநில கர்ணூல் மாவட்ட, தேசிய நெடுஞ்சாலை எண் 44-ல் எனுகமேரி பகுதியில் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி தீ பிடித்தது. இதனால், லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் பெரும் விபத்து ஏற்பட்டது.
அனந்தபூர் மாவட்டத்தில் வாடியம்பேட் ஹெச்.பி. எரிவாயு நிரப்பு மையத்தில் இருந்து 400 சிலிண்டர்களில் எரிவாயுவை நிரப்பிக் கொண்டு நந்தியாகோட்கூர் பகுதிக்கு லாரி புறப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை எண் 44-ல், எனுகமேரி பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தீ பிடித்தது. இதனை கவனித்த டிரைவரும், கிளீனரும் லாரியில் இருந்து குதித்துத் தப்பினர்.
ஆனால், லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி அங்கிங்கு தூக்கி வீசப்பட்டன. இதனால், எனுகமேரி பகுதியில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடினர். சில குடிசை வீடுகளிலும் தீ பற்றிக் கொண்டது.
தேசிய நெடுஞ்சாலையில் இரு புறமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT