Published : 05 Mar 2015 09:46 PM
Last Updated : 05 Mar 2015 09:46 PM
நாட்டின் பெண்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மார்ச் 8 முதல் 10ம் தேதி வரை தேசிய அளவிலான மூன்று நாள் மருத்துவ கருத்தொளி முகாம் துவக்க உள்ளது.
இந்த நடவடிக்கையின் கீழ் மாவட்ட, துணை மாவட்ட மருத்துவமனைகளிலும் சமூதாய சுகாதார மையங்களிலும் சிறப்பு சுகாதார பரிசோதனை முகாம்கள் மார்ச் 8, 9, 10ம் தேதிகளில் நடைபெறும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜே.பி நட்டா தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது:-
கர்பிணிகள் உள்பட அனைத்து பெண்களுக்கும் பரிசோதனை இலவசமாக செய்யப்படும்.
நாட்டின் பெண்களின் ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்துவதில் நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். இந்த இலக்கை அடைவதற்கு இத்திட்டம் உதவும். மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைச்சகம் பெண்களின் ஆரோக்கியத்திற்காக தன்னை அர்பணித்துக் கொண்டுள்ளது.
மாவட்ட, துணை மாவட்ட மருத்துவமனைகளிலும் சமூதாய சுகாதார மையங்களிலும் இந்த மூன்று நாட்களும் அனைத்து பெண்களுக்கும் தேவையான பரிசோதனைகள் செய்யப்படும். தேவைப்பட்டால் இலவசமாக சிகிச்சையும் அளிக்கப்படும். 40 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனை செய்யப்படும். 30 முதல் 60 வயது வரையான பெண்களுக்கு கருப்பை வாய் புற்று நோய்க்கான பரிசோதனை செய்யப்படும்.
அனைத்து பெண்களுக்கும் கருவுற்ற காலத்திலும் பிரசவத்திற்கு பிறகான மருத்துவ சேவைகளும் வழங்கப்படும். தாய்-சேய் பாதுகாப்பு அட்டைகளும் வழங்கப்படும். அதிக ஆபத்துக்குரிய கர்பிணி பெண்கள் கண்டறியப்பட்டு தாய்-சேய் அட்டையின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். தேவை ஏற்படின், இப்பெண்கள் மேம்பட்ட சுகாதார வசதிகள் உள்ள இடங்களுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். இம் முகாம்களில், குடும்ப கட்டுப்பாடு சேவைகளும் இலவசமாக வழங்கப்படும். குழந்தைப் பிறப்பு, மகப்பேரின் அபாய அறிகுறிகள், ஊட்டச்சத்து, மருத்துவமனையில் குழந்தைப் பிறப்பு, மகப்பேறுவிற்கு பிறகு குடும்பக்கட்டுப்பாடு கருவுற்ற காலத்திலும் பிரசவத்திற்கு பிறகும் தேவையான கவனம், தாய் பால் அளித்தல், ஈடுசெய்யக்கூடிய உணவை அளித்தல், இரும்பு ஊட்டச்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து மாத்திரைகளின் முக்கியத்துவம் பரிந்துரைக்கப்படும் போக்குவரத்து, மகப்பேறு பாதுகாப்புத் திட்டம் மற்றும் தாய்-சேய் நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வசதிகள் ஆகியவைக் குறித்து பெண்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் சமூதாய சுகாதாரத்திற்காக மாநிலத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் ஆஷா சகோதரிகள் நிர்ணயிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT