Last Updated : 23 Mar, 2015 11:33 AM

 

Published : 23 Mar 2015 11:33 AM
Last Updated : 23 Mar 2015 11:33 AM

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் கேரள சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பு

கேரள சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) உறுப்பி னர்கள் நேற்று அமளியில் ஈடுபட் டதை தொடர்ந்து, அவை காலவரையின்றி ஒத்திவைக்கப் பட்டது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் 2 வாரங்களுக்கு முன்பே முடிவுக்கு வந்தது.

கேரளத்தில் மதுபான பார் உரிமையாளர்களிடம் நிதிய மைச்சர் கே.எம்.மாணி ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கே.எம்.மாணி பதவி விலக வலியுறுத்தியும், அவர் பட்ஜெட் தாக்கல் செய்வதை எதிர்த்தும் கடந்த 13-ம் தேதி சட்டப் பேரவையில் எல்டிஎப் உறுப் பினர்கள் ரகளையில் ஈடுபட் டனர். அப்போது ஏற்பட்ட வன் முறை தொடர்பாக எல்டிஎப் உறுப்பி னர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஒருவார கால இடைவெளிக்குப் பின் பேரவை நேற்று மீண்டும் கூடியது. எதிர்க் கட்சித் தலைவர் அச்சுதானந்தன் எழுந்து, “எல்டிஎப் உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை ஒருதலைப்பட்ச மானது. இந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். எதிர்க்கட்சி பெண் எம்எல்ஏக்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

இதனை முதல்வர் உம்மன் சாண்டி ஏற்கவில்லை. மார்ச் 13-ம் தேதி சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் உள்ளன. பெண் உறுப்பினர்களிடம் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் தவறாக நடக்கவில்லை. அவையில் நடந்தது உலகுக்கே தெரியும். 5 எம்எல்ஏக் களுக்கு கடுமையற்ற தண்ட னையே வழங்கப்பட்டுள்ளது” என்றார். ஆனால், இதனை எதிர்க் கட்சியினர் ஏற்காமல் அவையின் மையப்பகுதிக்கு சென்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

அவையில் அமைதி ஏற்படுத்த சபாநாயகர் சக்தன் முயன்றார். ஆனால், அவரது முயற்சி தோல்வி அடைந்ததால், கேள்வி நேரம் மற்றும் அவையில் பிற அலுவல் களை சபாநாயகர் ரத்துசெய்தார். கே.எம். மாணி கொண்டுவந்த நிதி மசோதாக்களை அவை யின் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டார். இதையடுத்து அமளிக்கு இடையே நிதி மற்றும் நிதி ஒதுக்கீடு மசோதாக்கள் விவாத மின்றி நிறைவேறின.

இதையடுத்து பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப் பட்டது.

முன்னதாக அவையை சுமூக மாக நடத்துவது தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் பேச்சு நடத்தினார். ஆனால் இதில் ஒரு மித்த கருத்து எட்டப்படவில்லை.

அவை ஒத்திவைப்புக்கு பின் முதல்வர் உம்மன் சாண்டி செய்தி யாளர்களிடம் கூறும்போது, “கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது துரதிர்ஷ்ட வசமானது. எதிர்க்கட்சிகளின் பிடி வாதப்போக்கே இதற்கு காரணம். பெண் எம்எல்ஏக்களிடம் அத்து மீறி நடந்துகொண்டதாக, நடை பெறாத ஒரு சம்பவத்தை எழுப்பு கின்றனர். பட்ஜெட் நாளன்று வன்முறையில் ஈடுபட்ட எம்எல்ஏக் களை பாதுகாக்கின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x