Published : 31 Mar 2015 09:13 AM
Last Updated : 31 Mar 2015 09:13 AM
ஆந்திர ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மன் பயணம் செய்த விமானம், பயணிகளின் உடைமைகளை விட்டுச் சென்றதால் அரை மணி நேரத்தில் மீண்டும் விமான நிலையத்துக்கு திரும்பி வந்தது. இதுகுறித்து விமான துறை அதிகாரிகள் விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் பொது ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் ஏர் இந்தியா விமானம் மூலம் ஹைதராபாத்திலிருந்துநேற்று காலையில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் பயணிகளின் உடைமைகளை விமான நிலையத்திலேயே விட்டுச் சென்றது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமான பைலட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விமானம் அரை மணி நேரத்தில் மீண்டும் ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்தது. பின்னர் பயணிகளின் உடைமைகள் அந்த விமானத்தில் ஏற்றப்பட்ட பின்னர் மீண்டும் விமானம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது.
இதனால் சுமார் 1 மணி நேரம் தாமதம் ஆனது. விமான நிலைய அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு, தண்ணீர், உயர் நீதிமன்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக ஆளுநர் நரசிம்மன் டெல்லிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT