Published : 14 Mar 2015 02:18 PM
Last Updated : 14 Mar 2015 02:18 PM

நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிர்ப்பு: நிதிஷ் குமார் உண்ணாவிரதம்

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை எதிர்த்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.

அதிகாலையிலேயே கட்சி அலுவலகத்துக்கு வந்த அவர், யோகா பயிற்சிக்குப் பின் குளித்துவிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கினார். அவருடன், கட்சி உறுப்பினர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை நிதிஷ் குமார், ‘கருப்புச் சட்டம்' என்று விமர்சித்ததோடு, அதனைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எந்த ஒரு நிலையிலும் அந்தச் சட்டத்தை பிஹாரில் அமல்படுத்தப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவுக்கு சமீபத்தில் நிதிஷ் குமார் தனது ஆதரவை அளித்திருந்தார்.

இந்நிலையில், அவர் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட் டத்தை இன்று கட்சி தலைமையகத்தில் மேற்கொண்டுள்ளார்.

இதற்கிடையே அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை, இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டு வருகின்றன.

இதற்காக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ், ஈடுபட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x