Last Updated : 12 Mar, 2015 11:59 AM

 

Published : 12 Mar 2015 11:59 AM
Last Updated : 12 Mar 2015 11:59 AM

சர்வதேச பசுமை இயக்க ஆர்வலர் பிரியா பிள்ளைக்கு எதிரான உத்தரவு ரத்து

பசுமை இயக்க ஆர்வலர் பிரியா பிள்ளையை தேடப்படும் நபராக அறிவித்து பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.

கிரீன்பீஸ் சர்வதேச சுற்றுச் சூழல் அமைப்பைச் சேர்ந்த பிரியா பிள்ளை பிரிட்டிஷ் எம்.பி.க் களை சந்திக்க கடந்த ஜனவரி யில் லண்டன் செல்ல திட்டமிட்டி ருந்தார். ஆனால் விமான நிலை யத்தில் அவர் தடுத்து நிறுத்தப் பட்டார்.

இதைத் தொடர்ந்து மத்திய உளவுத் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கு நீதிபதி ராஜீவ் சாக்தர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:

விமான நிலையத்தில் பிரியா பிள்ளை தடுக்கப்பட்டது அடிப்படை உரிமை மீறல் ஆகும். கருத்து சுதந்திரத்துக்கு தடை விதிக்கக்கூடாது. வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் தேடப்படும் நபராக பிரியாபிள்ளை அறிவிக் கப்பட்டுள்ளார். அந்தப் பட்டியல் இருந்து அவரது பெயரை உடனடியாக நீக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் மத்தியப் பிரதேசத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை பிரியா பிள்ளை எதிர்த்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் எம்.பி.க்களை சந்திக்க அவர் லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தார்.

சர்வதேச அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பிரியாபிள்ளை முயற்சித்ததால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x