Published : 24 Mar 2015 03:18 PM
Last Updated : 24 Mar 2015 03:18 PM
சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ க்வான் யூ இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். நிமோனியா தாக்கப்பட்டதன் காரணமாக லீ க்வான் (91), நேற்று (திங்கள்கிழமை) மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு வரும் 29-ல் நடைபெறுகிறது.
லீ க்வான் இறுதிச்சடங்கில், பிரதமர் மோடி கலந்துகொள்வார் என வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று பிரதமர் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், ""சிங்கப்பூர் தந்தையும் முன்னாள் பிரதமருமான லீ க்வான் யூ மரணமடைந்தது மிகவும் வேதனை அளிக்கும் தருணம்.
தொலைநோக்குப் பார்வையுடன் தலைவர்கள் மத்தியில் சிங்கமாகத் திகழ்ந்தவர். லீயின் வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களை அளிப்பதாக இருக்கிறது. அவரது இழப்பு வருத்தமளிக்கிறது.
லீயின் குடும்பத்தினருக்கும் அம்மக்களுக்கும் நமது பிரார்த்தனை உடன் இருக்கும். லீயின் ஆன்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT