Published : 19 Mar 2015 09:43 AM
Last Updated : 19 Mar 2015 09:43 AM
நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் தோன்றி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத் தில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் அவர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று அம்மாநில அரசு தெரி வித்துள்ளது.
எனினும், இருதரப்புக்கும் ஏற்ற உடன்படிக்கையின் கீழ் நிலங் கள் கையகப்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித் துள்ளார். இதற்குப் புதிய முறை கையாளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கு இழப்பீடு வழங்கப்படும். அதேபோல கிராமப் புறங்களில் உள்ள நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட நான்கு மடங்கு இழப்பீடு வழங்கப்படும்.
தவிர, அந்த நிலங்களில் உள்ள வீடுகள், மரங்கள் மற்றும் பயிர்கள் ஆகியவற்றுக்கும் சேர்த்து இழப்பீடு வழங்கப் படும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
இந்தப் புதிய முறையின் மூலம், மாநில அரசு, மேம்பாட்டு ஆணையங்கள், மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இனி நேரடியாகவே நில உரிமை யாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களிடம் ஒப்புதல் பெற்று, நிலங்களைப் பெறுவ துடன், அவர்களுக்கான முறை யான இழப்பீட்டையும் வழங்க முடியும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT