Published : 13 Mar 2015 08:55 AM
Last Updated : 13 Mar 2015 08:55 AM
டெல்லியில் கடந்த 2013 டிசம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக 31, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8 இடங்களைக் கைப் பற்றின. பின்னர் காங்கிரஸ் ஆதர வுடன் ஆம் ஆத்மி சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் முதல்வரானார். எனினும் மத்திய அரசைக் கண்டித்து 49 நாட் களில் ராஜினாமா செய்தார். டெல்லிதேர்தலில் மீண்டும் போட்டி யிட்டு முதல்வராக கேஜ்ரிவால் பதவியேற்றார்.
இந்நிலையில், ‘‘டெல்லியில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையில், 6 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை கட்சியில் இருந்து பிரித்து கொண்டு வர முயற்சிக்கும்படி கேஜ்ரிவால் கூறினார்.
அவர்களை வைத்து தனிக் கட்சி தொடங்கி பின்னர் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றும் கேஜ்ரிவால் என்னிடம் கூறினார்’’ என்று ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராஜேஷ் கார்க், இரண்டு நாட்களுக்கு முன்னர் குற்றம் சாட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கேஜ்ரிவால் மீது புகார் கூறிய மறுநாளே தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக போலீஸில் ராஜேஷ் கார்க் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து ராஜேஷ் நேற்று கூறியதாவது:
ஆம் ஆத்மி தொண்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு மொபைல் போனில் ஒருவர் என்னிடம் பேசினார். அப்போது, கேஜ்ரிவால் மீது புகார் கூறுவதை இத்துடன் விட்டுவிடுங்கள். நீங்கள் புத்திசாலி. அதனால்தான் சொல் கிறேன்.
நான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன். என்ன நடக்கும் என்பதை காலம் சொல்லும். இந்தப் பிரச்சினையை மேலும் கிளப்பாதீர்கள். என்னுடைய தொலைபேசி எண் உங்கள் மொபைலில் பதிவாகி இருக்கும்’’ என்று கூறி விட்டு தொடர்பை துண்டித்துவிட்டார். எனக்கு வந்த அழைப்பு சர்வதேச தொலைபேசி எண்ணாக உள்ளது.
கொலை மிரட்டல் விடுத்தவரின் உரையாடலை நான் மொபைலில் பதிவு செய்தேன். அதை போலீஸாரிடம் வழங்கி உள்ளேன்.
இவ்வாறு ராஜேஷ் கூறினார்.
இதேபோல் முன்னாள் எம்எல்ஏ ரோகிணியும் கேஜ்ரிவால் மீது பரபரப்பு புகார் கூறியிருந்தார். மேலும் கேஜ்ரிவால் - ராஜேஷ் இடையே நடந்த உரையாடலை தான் போனில் பதிவு செய்திருப் பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர்களுடைய புகார்களை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. டெல்லியில் மறுபடியும் தேர்தல் நடந்தபோது, இருவருக்கும் கட்சி வாய்ப்பு அளிக்கவில்லை. அந்த ஆத்திரத்தில் கேஜ்ரிவால் மீது பொய்யான புகார்களைக் கூறுகின்றனர் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT