Published : 13 Mar 2015 08:48 AM
Last Updated : 13 Mar 2015 08:48 AM

ஆந்திர புதிய தலைநகருக்கு ரூ.3,168 கோடி: பட்ஜெட்டில் அரசு அறிவிப்பு

ஆந்திர மாநிலத்தின் 2015-16 ஆண்டுக்கான பட்ஜெட்டை ரூ. 1,13,049 கோடியில் நிதியமைச்சர் யனமல ராமகிருஷ்ணுடு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் புதிய தலைநகருக்காக ரூ. 3,168 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

தமிழகத்தில் ‘அம்மா உணவகம்’ போன்று, அங்கு “அண்ணா அம்ருத ஹஸ்தம்” எனும் திட்டத் துக்காக ரூ. 104 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

மேலும், வருவாய்த் துறைக்கு ரூ. 1,429 கோடி, பாதுகாப்புக்கு ரூ. 4,062 கோடி, சாலை மற்றும் கட்டிடத் துறைக்கு ரூ. 2,960 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ. 8,212 கோடி, மருத்துவத் துறைக்கு ரூ. 5,728 கோடி, தாய்-சேய் நலத் துறைக்கு ரூ. 1080 கோடி, நீர்வளத் துறைக்கு ரூ.5,258 கோடி, இந்து சமய அறநிலைத் துறைக்கு ரூ. 200 கோடி, வனத் துறைக்கு ரூ. 281 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை ரூ. 7,300 கோடியாக அறிவிக்கப் பட்டுள்ளது.

விஜயவாடா, விசாகப்பட்டினம் நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயத்துக்கென தனி பட்ஜெட் இன்று தனியாக தாக்கல் செய்யப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x