Last Updated : 28 Mar, 2015 01:30 PM

 

Published : 28 Mar 2015 01:30 PM
Last Updated : 28 Mar 2015 01:30 PM

ஆம் ஆத்மி தேசிய செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் நீக்கம்: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனத் தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் அந்தக் கட்சியின் தேசிய செயற் குழுவிலிருந்து நேற்று நீக்கப் பட்டனர்.

கட்சித் தலைமையுடன் மோதல்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆம் ஆத்மியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. அந்தக் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவரான சாந்தி பூஷண், பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடிக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார்.

சாந்தி பூஷணின் மகன் பிரசாந்த் பூஷணும், மூத்த தலைவர் யோகேந்திர யாதவும் ஓரணி யாகச் செயல்பட்டு அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக காய் களை நகர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

டெல்லி முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பொறுப்பேற்ற பிறகு இந்த உட்கட்சி பூசல் பகிரங்கமாக வெடித்தது. கேஜ்ரிவால் சர்வாதிகார போக்குடன் செயல் படுவதாக பிரசாந்த் பூஷணும் யோகேந்திர யாதவும் ஊடகங் களுக்கு பேட்டியளித்தனர். தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தேசிய கவுன்சில் கூட்டம்

இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மியின் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கவுன்சிலின் 311 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் இருவரையும் தேசிய செயற் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதற்கு 247 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். 10 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றவர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதைத் தொடர்ந்து, 21 உறுப்பினர்கள் கொண்ட தேசிய செயற்குழுவில் இருந்து பூஷணும் யாதவும் நீக்கப்பட்டதாக கட்சியின் மூத்த தலைவர்கள் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், குமார் விஸ்வார் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

பூஷண், யாதவின் ஆதரவா ளர்கள் ஆனந்த் குமார், அஜித் ஜா ஆகியோரும் தேதிய செயற் குழுவில் இருந்து நீக்கப்பட்டனர்.

முன்னதாக தீர்மானம் முன் மொழியப்படுவதற்கு சிறிது நேரத் துக்கு முன்பு கூட்டத்தில் இருந்து கேஜ்ரிவால் வெளியேறினார்.

வழக்கு தொடர முடிவு

இந்த கூட்டம் முடிந்தபிறகு யாதவும் பூஷணும் சேர்ந்து கேஜ்ரி வாலை கடுமையாக விமர்சித்துப் பேசினர். அவர்கள் கூறியதாவது:

தீர்மானத்தை எதிர்க்கும் தேசிய கவுன்சில் உறுப்பினர்களை தாக்குத வற்காக அடியாட்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். பல உறுப்பி னர்கள் தாக்கப்பட்டனர். முறையற்ற வழிகளை கேஜ்ரிவால் பின்பற்றி வருகிறார். ஆம் ஆத்மியில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. எங்களை நீக்கியதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

இதைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற வளாகத்தில் அமர்ந்து யோகேந்திர யாதவும் அவரது ஆதரவாளர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேதா பட்கர் விலகல்

ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் களில் ஒருவரான மேதா பட்கர் கட்சியில் இருந்து நேற்று விலகி னார். அவர் கூறியபோது, கட்சியின் அடிப்படை கொள்கைகள் மீறப் பட்டு வருகின்றன, பூஷணும் யாதவும் நீக்கப்பட்டதை வன்மை யாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x