Published : 14 Mar 2015 09:24 AM
Last Updated : 14 Mar 2015 09:24 AM
தொழில் கொள்கை மற்றும் மேம் பாடு குறித்த அரசின் ரகசிய ஆவணங்களை தனியார் ஒரு வருக்கு வழங்கிய குற்றச்சாட்டில், இரண்டு அரசு அதிகாரிகளை சி.பி.ஐ. காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆவணத் திருட்டு தொடர்பாக நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பங்குகள் விற்பனை இமற்றும் குறைதீர் துறையின் சார்பு செயலர் அசோக் குமார் சிங் மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை பிரிவு அலுவலர் லாலா ராம் ஷர்மா ஆகியோர் தொழில் கொள்கை தொடர்பான ஆவணத் திருட்டில் ஈடுபட்டதாக சி.பி.ஐ.யால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நேற்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் முன்பு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி எஸ்.சி.ராஜன், அவர்கள் இருவரையும் மார்ச் 17ம் தேதி வரை சி.பி.ஐ. காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT