Last Updated : 05 Mar, 2015 08:49 AM

 

Published : 05 Mar 2015 08:49 AM
Last Updated : 05 Mar 2015 08:49 AM

நாட்டை காப்பாற்ற வலுவான ராணுவம்: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

நாட்டின் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத் திட வலுவான ராணுவம் அவசியம் என்று கூறி இருக்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்திய விமானப் படையின் இரு பிரிவுகளுக்கு குடியரசுத்தலைவர் தர விருது வழங்கி பேசும்போது முகர்ஜி கூறியதாவது:

பொறுப்புமிக்க நாடு என்ற வகையில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் கட்டிக் காப்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. அதற்கு வலுவான பாதுகாப்புப் படையும் நம்மைக் கண்டு அஞ்சும் நிலையையும் உருவாக்க வேண்டும்.

அனைவருக்கும் சமூக அதிகாரம் அளிக்கவும் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை எட்டவும் இந்தியா முழு மூச்சுடன் போராடி வருகிறது. அதே வேளையில் நாட்டின் இறையாண்மை, ஒருமைப் பாட்டை கட்டிக்காக்கும் பாது காப்புத் திறனை வலுப்படுத்தும் நடவடிக்கையிலும் முழு கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்திய விமானப்படை இறையாண்மையை மட்டுமே கட்டிக் காத்திடவில்லை. இயற்கை பேரழிவு ஏற்படும்போது இடர்பாடுகள் பற்றி அஞ்சாமல் நிவாரணப் பணிகளிலும் ஈடுபடுகின்றது. விமானப்படையின் பணிகளை நாம் பாராட்டுவது தகும். தன்னுயிர் பற்றி அஞ்சாமல் செயல்படும் விமானப்படை வீரர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம்.

போர் மூண்டால் சுயநலம் பாராது அவர்கள் காட்டும் ஈடுபாடும், துணிச்சலும், தொழில் நேர்த்தியும் ஒப்பற்றது. அதற்காக அவர்களை கவுரவிப்பது தகுந்த செயலாகும். இவ்வாறு பிரணாப் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x