Last Updated : 11 Mar, 2015 12:31 PM

 

Published : 11 Mar 2015 12:31 PM
Last Updated : 11 Mar 2015 12:31 PM

சொத்துக் குவிப்புக்கு ஆதாரம் உள்ளது: ஜெ. வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி எழுத்துபூர்வ வாதம்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில், சுப்பிரமணியன் சுவாமி தனது எழுத்துபூர்வ வாதத்தை இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்தார்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவரது 14 பக்க வாதத்தில், பொது ஊழியரான ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளதாக, சுப்பிரமணியன் சுவாமி தரப்பு கூறுகிறது.

சுப்பிரமணியன் சுவாமியின் எழுத்துபூர்வ வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமாரும் இன்று பிற்பகலில் தங்கள் இறுதி வாதத்தை முன்வைக்க வேண்டும் என்று கூறி, விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.

இரு தரப்பு வாதத்துக்குப் பிறகு, இன்று பிற்பகலில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறை யீட்டில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பிலும் சுமார் 300 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை நேற்று தாக்கல் செய்தனர். வழக்கில் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். அதன் முழு விவரம் >சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீடு: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x