Last Updated : 22 Mar, 2015 12:28 PM

 

Published : 22 Mar 2015 12:28 PM
Last Updated : 22 Mar 2015 12:28 PM

பாகிஸ்தான் விவகாரத்தில் மோடி அரசு மென்மை போக்கை கடைப்பிடிக்கிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் பாகிஸ்தான் செயல்படுகிறது, ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த சில நாள்களில் ஜம்மு-காஷ்மீரின் கதுவா, சம்பா மாவட்டங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதுகுறித்து காஷ்மீர் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஷாம் லால் சர்மா ஜம்முவில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

காஷ்மீரில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள தீவிரவாதிகள் முயன்று வருகின்றனர். அவர்களை பின்னணியில் இருந்து பாகிஸ்தான் இயக்கி வருகிறது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசுக்கு கடும் ஆட்சேபத்தை, எதிர்ப்பை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

இந்தியாவின் ஒருமைப் பாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி னால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்த வேண்டும்.

மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு காஷ்மீர் எல்லையில் 846 முறை பாகிஸ்தான் ராணுவம் சண்டை நிறுத்தத்தை மீறியுள்ளது.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பாகிஸ்தான் விவகாரத்தில் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x