Published : 13 Mar 2015 10:55 AM
Last Updated : 13 Mar 2015 10:55 AM
கேரள சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் தாக்கலின்போது கடும் அமளி நிலவியது. பேரவைக்கு வெளியிலும் எதிர்க்கட்சியான இடதுசாரி கூட்டணியினர் போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் மார்க்சிஸ்ட் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.
கேரளத்தில் காங்கிரஸ் தலைமை யிலான ஜக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் உள்ளது. மாநிலத்தில் மதுபான பார்களை அனுமதிக்க லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள நிதி அமைச்சர் கே.எம்.மாணி பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இந்நிலையில், அவர் களது கடும் எதிர்ப்பு, அமளிக்கு மத்தியில் மாணி பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார்.
இதனால் ஆவேசமடைந்து வன்முறையில் இறங்கிய எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை தாக்கி சேதப் படுத்தினர்.
போலீஸ் தடியடி
மாணிக்கு எதிரான போராட்டம் பேரவைக்கு வெளியில் வன்முறை யாக மாறியது. போராட்டத்தில் இறங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் கம்யூனிஸ்ட் இளைஞர் அணி தொண்டர்களை தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீஸார் கலைத்தனர். போராட்ட கும்பல் போலீஸ் ஜீப் ஒன்றுக்கு தீவைத்தது. இந்த வன்முறையில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 64 வயது தொண்டர் உயிரிழந்தார்.
பாதுகாப்பு வளையம்
எதிர்க்கட்சியின் எதிர்ப்பை பொருட்படுத்தாத அமைச்சர் மாணி, பட்ஜெட்டின் சில பகுதிகளை வாசித்தார். அவரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தடுக்காத வகையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்களும் அவைக் காவலர்களும் பாதுகாப்பு வளையம்போல சுற்றி நின்றனர்.
ஊழல் கறைபடிந்த அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்வதை ஏற்க முடியாது என்பதே தங்களது நிலை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அனைத்து வழிகளும் அடைப்பு
பட்ஜெட் தாக்கல் செய்யப்படு வதற்கு முன்னரே இடதுசாரி ஜனநாயக முன்னணி உறுப் பினர்கள் பேரவைக்குச் செல்லும் நுழைவாயில்கள், சபாநாயகர் மேடைக்குச் செல்லும் வழிகள் அனைத்தையும் அடைத்தனர்.
பட்ஜெட் தாக்கலுக்கான நேரம் நெருங்கியதும் இடதுசாரி ஜனநாயக முன்னணி உறுப்பி னர்கள் சிலர் பேரவை அரங்கில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். அவர்களை வெளியேற்ற அவைக் காவலர்கள் முயற்சித்தபோது பிரச்சினை தொடங்கியது.
இந்நிலையில் குஞ்சகமது, இ.பி.ஜெயராமன், ஜேம்ஸ் மாத்யூ, டி.விராஜேஷ், வி.சிவன் குட்டி ஆகிய எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சபாநாயகரின் இருக்கையை தூக்கி வீசி, ஒலி பெருக்கிகள், கம்ப்யூட் டர்கள், மின்விளக்குகளை சேதப்ப டுத்தினர். அதையடுத்து இடது ஜனநாயக முன்னணி மற்றும் அவைக்காவலர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேஜைகள் மீது ஏறி நின்று, முடிந்தால் பட்ஜெட்டை தாக்கல் செய்து பார்க்கட்டும் என ஆளும் முன்னணிக்கு சாவல்விடுத்தனர்.
10 நிமிட பட்ஜெட்
இந்த பரபரப்புக்கு மத்தியில் மாணி அவைக்குள் நுழைந்தார். சபாநாயகர் என்.சக்தனை அவைக்குள் நுழையவிடாமல் தடுத்து பட்ஜெட் உரை நடைபெறு வதை தடுக்க எதிர்க் கட்சிகள் திட்டமிட்டிருந்தன.
மாணி பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியதும், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பிஜு மோல், மார்க்சிஸ்ட் உறுப்பினர் கே.லத்திகா ஆகியோர் மேஜை மீது ஏறி அமைச்சருக்குப் பாதுகாப்பாக நின்ற அவைக் காவலர்களை கலைக்க முயற்சித்தனர். சில முக்கியமான பகுதிகளை மட்டும் படித்து 10 நிமிடத்தில் பட்ஜெட் உரையை முடித்தார் மாணி.
அமளியின்போது மார்க்சிஸ்ட் மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தாமஸ் ஐசஸ் உள்ளிட்ட இடது முன்னணி உறுப்பினர்கள் கீழே விழந்தனர். அவை நடுப்பகுதிக்குச் சென்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியபோது பரபரப்பான சூழல் நிலவியது.
இது கேரள சட்டப் பேரவையின் கருப்பு நாள் என்றும், எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட்கள் ஜனநாயக வரம்புகளை மீறி செயல்படுகின்றனர் என்றும் முதல்வர் உம்மன் சாண்டி கருத்துத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT