Last Updated : 11 Mar, 2015 08:20 AM

 

Published : 11 Mar 2015 08:20 AM
Last Updated : 11 Mar 2015 08:20 AM

சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீடு: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறை யீட்டில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பிலும் சுமார் 300 பக்கங் கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை நேற்று தாக்கல் செய்தனர். வழக்கில் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக் கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னி லையில் 40-வது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில், சொத்துக்குவிப்பு வழக் கில் இணைக்கப்பட்டுள்ள ஜெய லலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பு எழுத்துப்பூர்வ இறுதி வாதத்தை நீதிபதியிடம் வழங்கினார்.

எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட இறுதி வாதம் 3 பகுதிகளை கொண்டிருந்தது. 177 பக்கங்கள் கொண்ட முதல் பகுதியில் சொத்துக்குவிப்பு வழக் கின் விசாரணையின் தொடக்கத் தில் இருந்து தீர்ப்பு வரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை செய்த தவறுகள் சுட்டிக்காட்டப் பட்டிருந்தன. 65 பக்கங்கள் கொண்ட 2-வது பகுதியில் 1991-96 காலகட்டத்தில் நால்வரின் வரவு, செலவு கணக்குகள் அடங்கி இருந்தன.

8 பக்கங்கள் கொண்ட 3-வது பகுதியில் நால்வரின் சொத்துப் பட்டியல், அதற்கான வருமான ஆதாரத்தை அட்டவணையாக குறிப்பிட்டு இருந்தனர். சுமார் 300 பக்கங்கள் அடங்கிய இந்த வாதம்தான் தீர்ப்பை மாற்றுவதாக அமையும் என ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் கூறினர்.

தொடரும் விளக்கங்கள்

இதையடுத்து நீதிபதி, குற்றவாளி கள் தரப்பு தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வ வாதத்தில் குறிப் பிட்டுள்ள முக்கிய அம்சங்களை மிக சுருக்கமாக ஜெயலலிதா உள் ளிட்ட நால்வர் தரப்பு வழக்கறிஞர் கள் எடுத்துரைக்க வேண்டும். அதற்கு அரசு வழக்கறிஞர் பவானிசிங் பதில் அளிக்க வேண் டும்'' என கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார், சசிகலா வின் வழக்கறிஞர் மணிசங்கர் ஆகியோர் சுருக்கமாக வாதிட் டனர்.

பவானிசிங் இன்று பதில்

வழக்கறிஞர்களின் வாதத்துக்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர் பவானிசிங், “கூட்டுச்சதி, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்தது, ஜெயலலிதா வின் பணம் 32 தனியார் நிறு வனங்களில் முதலீடு செய்யப் பட்டது அனைத்தும் உண்மை. இதனை விசாரணை நீதிமன்றத் தில் ஆதாரப்பூர்வமாக நிரூபித் துள்ளோம். இது தொடர்பாக எனது விளக்கத்தை புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்கிறேன்'' என்றார்.

தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு

இதையடுத்து நீதிபதி, “வழக்கின் இரு தரப்பு வாதமும், எழுத்துப் பூர்வ வாதமும் நிறைவடைந்துள் ளது. தன்னை மூன்றாம் தரப்பாக சேர்க்கக்கோரிய இவ்வழக்கின் முதல் புகார்தாரர் சுப்பிரமணியன் சுவாமி எங்கே?'' எனக் கேட்டார்.

அப்போது ஆஜரான‌ சுப்பிர மணியன் சுவாமியின் வழக்கறிஞர் பவன் சந்திர ஷெட்டி, “புதன் கிழமை சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்வார்'' என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி, “இவ்வழக்கின் விசாரணையை பொறுத்தவரை புதன்கிழமைதான் கடைசி நாள். அனைத்து தரப்பும் தங்களது தரப்பில் தாக்கல் செய்ய வேண்டிய அனைத்து ஆதாரங்களையும், ஆவணங்களையும் புதன்கிழமை தாக்கல் செய்யுங்கள்.

தாக்கல் செய்யாவிட்டாலும், தீர்ப்பு வெளியாகும் தேதியை அறிவிப்பேன்'' எனக்கூறி வழக்கை புதன்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x