Published : 04 Mar 2015 08:33 PM
Last Updated : 04 Mar 2015 08:33 PM
மத நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
ராஜ்யசபாவில், பேசிய ராஜ்நாத் சிங், "மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும். இருப்பினும், மத நல்லிணக்கத்தின் அளவுகோலாக ஆங்காங்கே நடைபெறும் விரும்பத்தகாத செயல்களை வைத்துக் கொள்ளக் கூடாது. கடந்த 2014 அக்டோபர் மாதத்தில் இருந்து திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அக்டோபர் - டிசம்பர் காலக்கட்டத்தில் மத வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளன.
கடந்த அக்டோபரில் 49 சம்பவங்களும், நவம்பரில் 33 சம்பவங்களும், டிசம்பரில் 33 சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த புள்ளி விபரங்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத வன்முறைச் சம்பங்கள் அதிகமாக இருந்தன தற்போது பாஜக ஆட்சியில் குறைந்துள்ளன எனக் கூறி பெருமைப் பட்டுக் கொள்வதற்காக தெரிவிக்கவில்லை. மாறாக, மத வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை பாயும் என்பதை உணர்த்த பயன்படுத்திக் கொள்கிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT