Published : 18 Mar 2015 12:01 PM
Last Updated : 18 Mar 2015 12:01 PM
ஜெயலலிதா மேல்முறையீடு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பவானி சிங் நடுநிலையாக செயல்படவில்லை எனவே அவரை நீக்கிவிட்டு, அரசு தரப்பில் வாதாட வேறு வழக்கறிஞரை நியமிக்கும் வரை ஜெயலலிதா வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், இன்று விசாரணைக்கு வரும் மனுக்கள் பட்டியலில் திமுக மனு இடம் பெறவில்லை.
இதனையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதில் அனில் தாவே, மதன் பி லோகூர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னராக ஆஜராகிய திமுக வழக்கறிஞர் தங்களது மனுவை இன்றைக்கே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஆனால், "பல்வேறு முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளதால் திமுக மனு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக" நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT