Published : 23 Mar 2015 08:47 AM
Last Updated : 23 Mar 2015 08:47 AM
தாம் ஆட்சிக்கு வந்தால் வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) 50 சதவீதம் உயர்த்து வேன் என்பன உட்பட விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பிரதமர் நரேந்திர மோடி பல்டி அடித்துவிட்டார் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
மனதிலிருந்து (மான் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் வானொலி மூலம் உரையாற்றி வரும் பிரதமர் மோடி, நேற்று விவசாயிகள் பிரச்சினை பற்றி பேசினார். அப்போது, நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரச்சாரம் செய்வதாகக் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகை யில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
கடந்த ஓராண்டுக்கு முன்பு ஹசாரிபாக்கில் நடைபெற்ற தேர் தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை குறை கூறுவதற்காக லால் பகதூர் சாஸ்திரியின் ‘ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்ற சுலோகத்தை ‘மார் ஜவான், மார் கிஸான்’ என்று திரித்துக் கூறினார். வாக்குகளை வாங்குவதற்காகவே அவ்வாறு பேசினார்.
மேலும் தாம் ஆட்சிக்கு வந்தால் வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை 50 சத வீதம் உயர்த்துவேன் என்று வாக் குறுதி அளித்தார். இதுதொடர் பாக நாடாளுமன்றத் தில் நான் கேள்வி எழுப்பியபோது, எம்எஸ்பியை உயர்த்த முடியாது என தெரிவித்தார். இப்போது நஷ் டம் காரணமாக விவசாயிகள் தற் கொலை செய்து கொள்கின்றனர்.
எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுகின்றனர். இதை யெல்லாம் மத்திய அரசு கண்டு கொள்வதே இல்லை. இதன்மூலம் மோடி தனது வாக்குறுதியை நிறை வேற்றாமல் பல்டி அடித்துள்ளார்.
இவ்வாறு அகமது பட்டேல் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT