Published : 20 Mar 2015 08:48 AM
Last Updated : 20 Mar 2015 08:48 AM
ஒடிஸாவில் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 6 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு மே 10-ம் தேதி, 24 வயது தலித் பெண் ஒருவர் ஒடிஸாவில் பர்கார் மாவட்டத்தில் உள்ள பைகமல் கிராமத்தில் இருக்கும் அரசு அலுவலகம் ஒன்றுக்குச் சென்றார். அங்கு தனக்கான வேலைவாய்ப்புகள் குறித்து அறியச் சென்றிருந்தார்.
அப்போது அங்கு பிஜு ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர் மகேஷ் அகர்வால் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் பிஜய ரஞ்சன் சிங் பெரிஹாவின் உறவினர் குனால் சிங் பெரிஹா ஆகியோர் இருந்தனர்.
அவர்கள் அந்தப் பெண்ணுக்கு அரசு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதி கூறி அருகிலிருந்த கிடங்குக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப் படுகிறது. இதுகுறித்து தகவல றிந்த போலீஸார் உடனே அங்கு சென்று அந்தப் பெண்ணைக் காப்பாற்றினர்.
பின்னர் மருத்துவப் பரிசோதனைக்கு அந்தப் பெண் உட்படுத்தப்பட்டார். அதில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அகர்வால் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நீதிமன்றம் அந்த 6 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் ஒவ்வொருவருக்கும் ரூ.20 ஆயிரத்தை அபராதமாக விதித்தது. ஒருவேளை அவர் களால் அபராதத்தைச் செலுத்த முடியவில்லை என்றால், மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT