Published : 26 Mar 2015 08:59 AM
Last Updated : 26 Mar 2015 08:59 AM
தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற மேல் சபை (எம்எல்சி) தேர்தலில் பதிவான வாக்கு பெட்டியில் முதல்வருக்கு எச்சரிக்கை விடுக்கும் கடிதங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
தெலங்கானா, ஆந்திர மாநிலங் களில் பட்டதாரிகள், அரசு ஆசிரியர் கள் சார்பில் எம்எல்சி தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. இதில் பதிவான வாக்கு கள் நேற்று எண்ணப்பட்டன.ஹைதராபாத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்கு பெட்டியில் தெலங்கானா முதல்வருக்கு எச்சரிக்கை விடுக் கும் கடிதங்களும் சில கோரிக்கை மனுக்களும் இருந்தன. அந்த கடிதத்தில் “தெலங்கானா முதல் வருக்கு எச்சரிக்கை. தேர்தல் பிரச்சாரத்தின்போது, வேலை யில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாகவும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந் தரம் செய்வதாகவும் வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. உடனடி யாக அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கடுமை யான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று பல எச்சரிக்கை கடிதங்கள் ஹைதராபாத், நல்கொண்டா ஆகிய வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் இருந்தது தெரியவந்தது. குண்டூர்-கிருஷ்ணா மாவட்டங்களின் அரசு ஆசிரியர் எம்எல்சி தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் ராமகிருஷ்ணா வெற்றி பெற்றார். மற்ற தொகுதிகளில் தொடர்ந்து இரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT